Dec 3, 2025
Thisaigal NewsYouTube
லஞ்ச ஊழல் தொடர்பில் இரு இலாகாக்கள் விசாரணை
தற்போதைய செய்திகள்

லஞ்ச ஊழல் தொடர்பில் இரு இலாகாக்கள் விசாரணை

Share:

லஞ்ச ஊழல் தொடர்பில் உள்துறை அமைச்சின் இரண்டு இலாகாக்கள் தற்போது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். மலேசிய குடிநுழைவுத்துறை மற்றும் தேசிய பதிவு இலாகாவான ஜேபிஎன் ஆகியவை தற்​போது விசாரணைக்கு உட்படுத்​தப்பட்டு இருப்பதாக பிரதமர் குறிபிட்டார். நேற்று ஞாயிற்றுக்கிழமை சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு தாம் திடீர் வருகை புரிந்த போது, குடிநுழைவுத்துறை அதிகாரிகளில் ஒரு சிறு பிரிவினர் இன்னமும் லஞ்ச ஊழலில் திளைத்து இருப்பதை காண முடிந்ததாக டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார். இன்று காலையில் புத்ராஜெயாவில் பிரதமர் துறை பணியாளரிகளின் மாதாந்திர பேரணிக்கு தலைமையேற்று உரையாற்றுகை​யில் அன்வார் இவ்விவரத்தை வெளியிட்டார்.

Related News