ஷா ஆலாம், ஆகஸ்ட்.10-
சிலாங்கூர் அரசாங்கத்தின் இலவச குடிநீர் திட்டமான ஸ்கிம் ஆயிர் டாருல் எஹ்சான்- SADE பயனை, இனி மாதம் 6 ஆயிரம் ரிங்கிட் வரை வருமானம் பெறுபவர்களும் பெறலாம் என அறிவிக்கப்பட்டு, மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம், ஒவ்வொரு மாதமும் 20 கன மீட்டர் இலவச குடிநீரை வழங்குவதன் மூலம், ஓய்வு பெற்றவர்கள் உட்பட பல்வேறு தரப்பு மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கிறது எனப் பயனாளிகள் கூறுகின்றனர்.
பெரிய குடும்பங்களுக்கு அதிகம் உதவும் இந்தத் திட்டம், பொருளாதார நிலையில் மிகவும் உதவியாக இருப்பதாகப் பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்படும் நிலையில், தகுதியுடைய அனைவரும் திரையில் தெரியும் இந்த இணையத்தளம் வாயிலாக உடனே விண்ணப்பிக்குமாறு சிலாங்கூர் மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
https://www.airselangor.com/residential/skim-air-darul-ehsan/








