Oct 4, 2026
Thisaigal NewsYouTube

மாணவி ஐரின் சோஃபியா மரணம்: முழுமையான விசாரணைக்கு கல்வி அமைச்சர் உத்தரவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாணவி ஐரின் சோஃபியா மரணம்: முழுமையான விசாரணைக்கு கல்வி அமைச்சர் உத்தரவு

ஜோகூர் மாநிலம் யோங் பெங் பகுதியில் உள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில், 16 வயது மாணவி ஐரின் சோஃபியா முஹமட் கைரோல் ஃபைசால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தமது அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் வரும் அனைத்து விவகாரங்களையும் முழுமையாக ஆய்வு செய்யவுள்ளதாக கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல்களை நேரில் அறிய இன்று காலை யோங் பெங் சென்ற ஃபாட்லீனா சீடேக், அம்மாநில போலீசார், கல்வி இலாகா, பத்து பஹாட் மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் ஆகியோரைச் சந்தித்து, இச்சம்பவத்தின் காலவரிசை மற்றும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் பெற்றார்.

பின்னர் பத்து பஹாட், சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனையில், மாணவியின் குடும்பத்தினரையும் சந்தித்து இரங்கல் தெரிவித்தார்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து போலீசார் வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று சனிக்கிழமை மாலை, அம்மாணவி பள்ளி வளாகத்திற்குள் சுயநினைவின்றி கண்டெடுக்கப்பட்டு பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் 16 வயது ஆண் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு, 6 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவமானது குற்றவியல் சட்டம், பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காக விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவத்திற்கான காரணமும் நோக்கமும் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →