2023 ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் தினத்தையொட்டி, ஒரு தன்னார்வ மருத்துவரான டாக்டர் மலர் சாந்தி ஒரு முன்னுதாரண பணியாளர் விருது வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற விருதளிப்பு நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விருதினை வழங்கி, சிறப்பு செய்துள்ளார். கோவிட் 19 நோய்த் தொற்று பரவல் கடுமையாக இருந்த காலகட்டத்தில் மக்களின் உயிர் காப்பு தொடர்பாக அதிகமான தகவல்களை சமூக வலைத்தளங்களில் வழங்கி மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக மலர் சாந்திக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
மலாய் மொழியில் சரளமாக உரையாடும் திறனை கொண்டுள்ள டாக்டர் மலர் சாந்தி வழங்கிய ஒவ்வொரு தகவலும் பயன் மிகுந்ததாக இருந்ததுடன், அவரின் அடுத்தடுத்த தகவல்களை அறிவதற்கு சமூக வலைத் தளங்களில் அதிகமான ரசிகர் வட்டம் உருவாகியது.
கோவிட் 19 நோய்த் தொற்று பரவலாக இருந்த காலத்தில் மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு அதீத முன்னுரிமை வழங்கிய சேவையாற்றி வந்த செராஸ், கொலும்பியா ஆசியா மருத்துவமனையின் ஆபத்து அவசரப்பிரிவில் பணியற்றி வரும் 40 வயது மலர் சாந்தி, மருத்துவத்துறைக்கே ஒரு எடுத்துக்காட்டு என்று வர்ணிக்கப்பட்டுள்ளார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்


