கோலாலம்பூர், டிசம்ப்ர்.12-
நேற்று முன் தினம் மவுண்ட் கியாரா அடுக்குமாடிக் குடியிருப்பின், 26-ஆவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில், ஆடவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில், குற்றச்செயல்கள் எதுவும் இல்லை என்பதை போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
தடயவியல் நிபுணர்களும், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின், கே9 பிரிவைச் சேர்ந்தவர்களும், சம்பவ இடத்தை நேற்று மறு ஆய்வு செய்து, அங்கு குற்றச்செயல்கள் எதுவும் நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த 2021-ஆம் ஆண்டு முதல், அந்த வீட்டில் தனித்து வாழ்ந்து வந்த, பகுதி நேரப் கலைஞரான அந்த ஆடவர், கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில், தனது குடும்பத்தினரைக் கடைசியாகத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அதன் பின்னர், அன்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் அவர் உடல் கருகி பலியானார்.
இதனிடையே, மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் நடத்தப்பட்ட சவப் பரிசோதனையில், உடலில் ஏற்பட்ட தீக் காயங்கள் காரணமாக, அந்த ஆடவர், உயிரிழந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.








