Dec 2, 2025
Thisaigal NewsYouTube
இன்னிசை பாட்டு மன்றம்
தற்போதைய செய்திகள்

இன்னிசை பாட்டு மன்றம்

Share:

வரும் மே 13 ஆம் தேதி சனிக்கிழமை, மாலை 6 மணிக்கு கோலாலம்பூர், ஶ்ரீ மஹா மாரியம்மன் கோயில் தேவஸ்தான மண்டபத்தில் இன்னிசை பாட்டு மன்றம் நடைபெறவிருக்கிறது. கவியரசு கண்ணதாசன் பாடல்களில் மக்கள் மனங்களில் அதிகம் கவர்ந்தது காதல் பாடல்களா? தத்துவ பாடல்களா? பக்தி பாடல்களா? எனும் தலைப்பில் இந்த இன்னிசை பாட்டு மன்றம் நடைபெறவுள்ளது. தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஆர். நடராஜா தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் டத்தோ ஶ்ரீ டாக்டர் எம்.சரவணன் சிறப்பு வருகை புரிவார்.

இந்நிகழ்வின் நடுவருராக தமிழ்நாடு, பாண்டிச்சேரியிருந்து தொலைக்காட்சி புகழ் செந்தமிழ் அருவி, கலக்கல் காங்கேயனும் அரக்கணம், சென்னை மற்றும் பாண்டிச்சேரியிலிருந்து 4 பேச்சாளர்களும் 3 இசைக்கலைஞர்களும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

இந்த இன்னிசை பாட்டு மன்றம் நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

Related News