Dec 3, 2025
Thisaigal NewsYouTube
6 அடுக்குமாடி வீடுகள் தீயில் அழிந்தன
தற்போதைய செய்திகள்

6 அடுக்குமாடி வீடுகள் தீயில் அழிந்தன

Share:

பத்து கேவ்ஸ், செப்டம்பர்.15-

பத்து கேவ்ஸ், பிங்கிரான் பகுதியில் ஒரு அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் ஏற்பட்ட தீச் சம்பவத்தில் 6 வீடுகள் அழிந்தன.

இந்தச் சம்பவம் இன்று காலை 11.35 மணியளவில் நிகழ்ந்தது. 6 வீடுகளில் 3 வீடுகள் 100 விழுக்காடு முற்றாகச் சாம்பலானதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த செலாயாங், சுங்கை பூலோ, கோம்பாக் செலத்தான் மற்றும் ஷா ஆலம் ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 25 வீரர்கள் சுமார் அரை மணி நேரத்தில் தீணை ஒரு கட்டப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அதிர்ஷ்டசவசமாக எந்தவோர் உயிருடற் சேதமும் ஏற்படவில்லை என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அஹ்மாட் முக்லிஸ் குறிப்பிட்டார்.

Related News