Aug 23, 2026
Thisaigal NewsYouTube
இபிஎஃப் உறுப்பினர்களுக்கு மீண்டும் 6% லாப ஈவு? நிபுணர்கள் உற்சாக கணிப்பு!
தற்போதைய செய்திகள்

இபிஎஃப் உறுப்பினர்களுக்கு மீண்டும் 6% லாப ஈவு? நிபுணர்கள் உற்சாக கணிப்பு!

Share:

ஊழியர் சேமநிதி வாரியமான இபிஎஃப், 2026 ஆம் ஆண்டிலும் உறுப்பினர்களுக்கு சுமார் 6 சதவீத லாப ஈவு வழங்கும் நிலையில் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இபிஎஃப்பின் முதலீட்டு வருமானம் 48 சதவீதம் அதிகரித்து, 5750 கோடி ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 3892 கோடி ரிங்கிட்டாக இருந்தது.

இரண்டாவது காலாண்டில் மட்டும் முதலீட்டு வருமானம் 44 சதவீதம் உயர்ந்து 2977 கோடி ரிங்கிட்டை எட்டியுள்ளது. இதில் பங்குச் சந்தை முதலீடுகள் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளன.

நிபுணர்களின் கணிப்புப்படி, முதல் ஆறு மாதங்களின் வலுவான செயல்திறன், முழு ஆண்டிற்கும் நல்ல அடித்தளத்தை அமைத்துள்ளது.

எனினும், ஆண்டின் இரண்டாம் பாதியில் உலக சந்தை நிலவரம், மத்திய கிழக்கு பதற்றம், அமெரிக்காவின் பாதுகாப்பு வர்த்தகக் கொள்கைகள் மற்றும் வட்டி விகித மாற்றங்கள் போன்றவை சந்தைகளில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பெரிய அளவிலான சந்தைச் சரிவு ஏற்படாத பட்சத்தில், 2026 ஆம் ஆண்டிற்கான இபிஎஃப் லாப ஈவு 5.5 முதல் 6 சதவீதம் வரை இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். கடந்த 2025 ஆம் ஆண்டிற்கான இபிஎஃப் லாப ஈவு 6.15 சதவீதமாக இருந்தது.

Related News