Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பாலியல் பலாத்காரம்: லோங் டைகருக்கு 12 ஆண்டு சிறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாலியல் பலாத்காரம்: லோங் டைகருக்கு 12 ஆண்டு சிறை

மூவார், மே.30-

மாற்றான் மனைவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக லோங் டைகர் என்பவருக்கு 12 ஆண்டு சிறை மற்றும் 5 பிரம்படித் தண்டனை விதிக்கப்பட்டது.

36 வயதுடைய அப்துல் ஹாமிம் அப்துல் ஹாமிட் என்ற லோங் டைகர், தனக்கு எதிரான குற்றச்சாட்டில் நியாயமான சந்தேகங்களை எழுப்பத் தவறிவிட்டதாக நீதிபதி இர்வான் சுவாய்ன்போன் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

அதே வேளையில் குற்றச்சாட்டை நிரூபிப்பதில் பிராசிகியூஷன் தரப்பு வெற்றி கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி பிற்பகல் 2.05 மணியளவில் தங்காக், புக்கிட் கம்பீர், தாமான் ஶ்ரீ ஜெயாவில் உள்ள ஒரு வீட்டில் 19 வயது பெண்ணைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக லோங் டைகருக்கு எதிராகக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணுக்கு மனதில் ஆறாகக் காயத்தை ஏற்படுத்திய லோங் டைகர் செயல், கடுமையானதாகும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை