Sep 28, 2026
Thisaigal NewsYouTube
நெடுஞ்சாலைகளின் ராணி: ஸ்டீயரிங் பிடித்து சாதனை படைக்கும் 28 வயது காமணி
தற்போதைய செய்திகள்

நெடுஞ்சாலைகளின் ராணி: ஸ்டீயரிங் பிடித்து சாதனை படைக்கும் 28 வயது காமணி

Share:

மலேசிய நெடுஞ்சாலைகளில் பிரம்மாண்டமான டிரெய்லர் லாரிகளை லாவகமாக ஓட்டி, ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த துறையில் முத்திரை பதித்து வருகிறார் 28 வயது காமணி. சிலாங்கூர், பந்திங்கை சேர்ந்த காமணி, கடந்த 6 ஆண்டுகளாக நாடு முழுவதும் கனரக வாகனங்களை ஓட்டி வருகிறார்.

மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறையில் டிப்ளோமா முடித்த காமணி, தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்தபோது ஒரு பெண் டிரெய்லரில் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். அவர் ஓட்டுநராக இருப்பாரோ என்ற ஆர்வத்தில் விசாரித்தபோது, அவர் தனது கணவருக்குத் துணையாக வந்தவர் எனத் தெரியவந்தது. அந்த நிமிடமே, "ஏன் ஒரு பெண்ணால் கனரக லோரியை ஓட்ட முடியாது?" என்ற உத்வேகம் அவருக்குப் பிறந்தது.

விமான நிலைய வாடிக்கையாளர் சேவை அதிகாரி, தொழில்நுட்ப வல்லுநர் எனப் பல வேலைகளைச் செய்தாலும், டிரெய்லர் ஓட்டுவதில்தான் காமணிக்கு முழு சுதந்திரம் கிடைத்தது.

"டேங்கர் லாரி" ஓட்டுநரான காமணியின் தந்தை முருகன் தான், இவருக்குப் பெரிய உத்வேகம். தந்தையிடமிருந்தே பல நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார்.

தனது லாரியையே இரண்டாவது வீடாக மாற்றிக்கொண்டுள்ள காமணி, அங்கேயே சமையல் உபகரணங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வைத்துக்கொண்டு நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்கிறார்.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்