மலேசியர்கள் அனைவரும் மதப் பிரச்னைகளை, விவாதங்களாகவும், அரசியல் சர்ச்சைகளாக மாற்ற வேண்டாம் என்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா எச்சரித்துள்ளார்.
கூட்டரசு அரசியலமைப்பின் 3 வது பிரிவு படி, இஸ்லாத்தின் கூட்டாட்சி மதத்தின் நிலைப்பாட்டையும், இஸ்லாமிய மதத்தின் தலைவர் என்ற மலாய் ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டையும் அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா கேட்டுக்கொண்டார்.
இருப்பினும், மற்ற மதங்கள் அனைத்தும் நாட்டில் அமல்படுத்தப்படலாம். பன்மைத்துவத்தில் மலேசியர்களின் முழு சகிப்புத்தன்மையும், ஒற்றுமை மனப்பான்மையும் தான் நாட்டின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அடிப்படையாகும் என்று மாமன்னர் தெளிவுப்படுத்தினார்.
வலிமையான, வெற்றிகரமான, அதிகாரம் மிக்க மற்றும் கண்ணியமான ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதற்கு, நாட்டை சிறந்த எதிர்காலத்தை நோக்கி வழிநடத்த ஒவ்வொருவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


