கோலாலம்பூர், ஜூலை.13-
மலேசியாவில் உள்ளூர் பெண்களுக்கும் வெளிநாட்டு ஆண்களுக்கும் இடையே நடைபெறும் அதிக வயது வித்தியாசமுள்ள திருமணங்கள் குறித்து குடிநுழைவுத்துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது. 65 வயது உள்ளூர் பெண், 20 வயது வெளிநாட்டவரைத் திருமணம் செய்வது போன்ற சந்தேகத்திற்கிடமான திருமணங்களுக்கு இனி நீண்ட காலச் சமூக வருகை பாஸ் வழங்கப்படாது என குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் ஸாகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.
இது போன்ற marriage for convenience எனப்படும் "சௌகரிய திருமணங்கள்" சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறுவதைத் தடுப்பதே இதன் நோக்கம். சட்டப்பூர்வமாக நடத்தப்படும் திருமணங்கள் தடை செய்யப்படாவிட்டாலும், சமூகப் பிரச்சனையாக உருவெடுக்கும் இது போன்ற வழக்குகளில் விரிவான விசாரணை நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.








