Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பேரா மாநிலத்தில் மாபெரும் திட்டம்! தஞ்சோங் மாலிம் - லுமுட் புதிய நெடுஞ்சாலை!
தற்போதைய செய்திகள்

பேரா மாநிலத்தில் மாபெரும் திட்டம்! தஞ்சோங் மாலிம் - லுமுட் புதிய நெடுஞ்சாலை!

Share:

ஈப்போ, செப்டம்பர்.21-

பேரா மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தஞ்சோங் மாலிம் - லுமுட் இடையேயான புதிய நெடுஞ்சாலைத் திட்டம், 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் எனப் பேரா முதல்வர் டத்தோ ஶ்ரீ சரானி முகமட் வலியுறுத்தியுள்ளார்.

மின்சார வாகனத் தயாரிப்பு மையம் உருவாகி வரும் தஞ்சோங் மாலிமில் இருந்து, லூமுட் துறைமுகத்திற்கு எளிதாக வாகனங்களை ஏற்றுமதி செய்ய இந்த நெடுஞ்சாலை உதவும் என அவர் தெரிவித்தார். இந்தத் திட்டம் பேரா மாநிலத்திற்கு ஒரு முக்கியமான உந்துசக்தியாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இது குறித்த அறிவிப்பு, வரவிருக்கும் வரவு செலவுத் திட்ட அறிக்கைத் தாக்கலின் போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News