Sep 26, 2026
Thisaigal NewsYouTube
பெர்சத்து கட்சியுடனான கூட்டணி குறித்து பாஸ்  கட்சி விரைவில் ஆலோசனை
தற்போதைய செய்திகள்

பெர்சத்து கட்சியுடனான கூட்டணி குறித்து பாஸ் கட்சி விரைவில் ஆலோசனை

Share:

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் உறவைப் பாதிக்கும் வகையிலான சில நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பெர்சத்து உடனான அடுத்தகட்ட ஒத்துழைப்பு குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் பாஸ் கட்சி உள்வட்டாரக் கூட்டங்களை நடத்தவுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஸ் கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுத்தீன் ஹசான், இந்த விவகாரம் முதலில் பாஸ் கட்சி மட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அதன் பின்னரே பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் கூட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

கெராக்கான் கட்சியின் 58-வது ஆண்டு நிறைவு விழா மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தக்கியுத்தீன் ஹசான் இந்தத் தகவலை வெளியிட்டார்.

Related News