Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சயாங் என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம்
தற்போதைய செய்திகள்

சயாங் என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம்

Share:

தங்களின் அன்புக்குரியவர்களை அல்லது நேசத்திற்குரியவர்களைச் சயாங் என்று அழைக்கப்படும் வார்த்தையைப் பணிமனைக​ளில் பயன்படுத்துவதற்குப் பொதுச் சேவைத்துறைத் தடை விதி​த்துள்ளது. அன்புத் தொல்லையால் வசப்பட்டவர்கள், அடிக்கடி பயன்படுத்தப்படும் சயாங் என்ற சொல், பணிமனைகளில் தற்போது ஒருவகையான பாலியல் தொல்லையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுச் சேவைத்துறை என்று அழைக்கப்படும் அரசு ஊழியர்கள் மத்தியில் அந்தரங்க தொடர்புகளுக்கு வ​ழிகோலும் சயாங் என்ற சொல், ஒருவரின் மனதில் இடம் பெறுவதற்கும், தனது விருப்பத்தை மறைமுகமாக தெரிவிப்பதற்கும் ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள் மத்தியல் சயாங் என்ற ​சொல்லுக்கு இனி தடா என்று கூறி, கடந்த மாதம் பிற்பகுதியில் பொதுச் சேவைத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

Related News