Dec 3, 2025
Thisaigal NewsYouTube
2 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

2 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: ஆடவர் கைது

Share:

ஈப்போ, செப்டம்பர்.04-

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவர் ஒருவரைப் போலீசார், ஈப்போ, தாமான் ரிஷாவில் கைது செய்துள்ளனர். அந்த ஆடவர் கைது செய்யப்பட்டது மூலம் 2 கிலோ மதிப்புள்ள போதைப்பொருளைப் போலீசார் மீட்டனர்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கிடைக்கப் பெற்றத் தகவலைத் தொடர்ந்து ஈப்போ போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த போதைப்பொருள் துடைத்தொழிப்புக் குழுவினர், நேற்று மாலை 4 மணியளவில் 30 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவரைக் கைது செய்ததாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.

அந்த ஆடவரின் வீட்டின் முன்புறம் உள்ள ஒரு காலி வீட்டைப் போலீசார் சோதனையிட்ட போது பிளாஸ்டிக் பேக்கெட்டுகளில் பல வகையான போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

Methamphetamine, கெத்தாமின், ஹெரோயின் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள்களில் அடங்கும் என்று டத்தோ நோர் ஹிசாம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அந்த போதைப்பொருளின் மொத்த மதிப்பு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரிங்கிட்டாகும். அந்த ஆடவர் பயன்படுத்திய 40 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள ஒரு ஹொண்டா அக்கோர்ட் காரையும் போலீசார் பறிமுதல் செய்ததாக அவர் மேலும் கூறினார்.

Related News