Oct 18, 2026
Thisaigal NewsYouTube

சாலைத் தடுப்பை லோரி மோதியது, தடுப்பு சுவர் கீழே விழுந்தது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சாலைத் தடுப்பை லோரி மோதியது, தடுப்பு சுவர் கீழே விழுந்தது

கோலாலம்பூர், செப்டம்பர் 06

மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த லோரி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி தடுப்பு சுவரை மோதியது.

இதில் சாலைத்தடுப்பு சுவர், சரிந்து, மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்தது. இதில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் மீது விழுந்து சேதமுற்றது.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 1.40 மணியளவில் கோலாலம்பூர், துதா – உலு கெளாங் சாலையில் செந்தூலுக்கு அருகில் நிகழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் காயமடையவில்லை என்று கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் தலைவர் எஸ்பி முகமது ஜம்சூரி முகமட் இசாதெரிவித்தார்.

திடமான டம்பர்- டிப்பர் ரகத்தைச் சேர்ந்த Hino லோரி, ஜாலான் துன் ரசாக்கிலிருந்து கோம்பாக்கை நோக்கி சென்று கொடண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →