Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஆங்கில மொழி போதனை மறுபடியும் கொண்டு வரப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

ஆங்கில மொழி போதனை மறுபடியும் கொண்டு வரப்பட வேண்டும்

Share:

பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய இரு பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் நடைமுறையை மறுபடியும் அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கேட்டுக்கொண்டுள்ளார்.

தம்முடைய ஆட்சிக் காலத்தில் 2003 ஆம் ஆண்டில் தாம் அறிமுகப்படுத்திய கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் நடைமுறையை மறுபடியும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவது அவசியமான ஒன்றாகும் என்று துன் மகாதீர் வலியுறுத்தினார்.

அறிவியலிலும் கணிதத்திலும் உள்ள பாடத்திட்டங்கள் ஆங்கிலமொழியில் இருப்பதால் அப்பாடங்களை கற்றல், கற்பித்தலுக்கு அம்மொழியிலேயே கற்பதுதான் பலன் அளிக்குமே தவிர அதனை மொழிப்பெயர்த்து படிப்பதால் அப்பாடங்களின் ஆழத்தைக் கண்டறிவது மாணவர்களுக்கு சிரமமாகி விடலாம் என்று துன் மகாதீர் நினைவுறுத்தியுள்ளார்.

Related News