சுபாங்ஜெயா, சுபாங் பேரெட் வர்த்தக கட்டட வளாகத்தில் நேற்று பெய்த கனத்த மழையில் யாரும் காயம் அடையவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அடை மழையினால் அந்த வர்த்தக கட்டட வளாகத்தின் கீழ் தளத்தில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் கரைப்புரண்டாடி பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பான சமுக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி ஒன்று, அந்த பேரங்காடி மையத்தில் வெள்ள நிலைமையை உண்மையாக எடுத்துக்காட்டவதாக இருந்தது.
எனினும் இந்த திடீர் வெள்ளத்தில் யாரும் காயம் அடையவில்லை என்ற அந்த பேரங்காடி வர்த்தக தளத்தை நிர்வகித்து வரும் ஹெக்டர் ப்ரோபெர்ட்டி செர்விஸ்ஸெஸ் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. இச்சம்பவத்தினால் பொது மக்களுக்கு ஏற்பட்ட அசெகரியத்திற்கு அந்த நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.








