Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பொது இடத்தில் கலவரத்தில் ஈடுபட்ட நான்கு ஆடவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

பொது இடத்தில் கலவரத்தில் ஈடுபட்ட நான்கு ஆடவர்கள் கைது

Share:

மலாக்கா, ஆகஸ்ட்.16-

மலாக்கா, ஜாலான் ஜாசின்-பெம்பான் சாலையோரத்தில் நிகழ்ந்த சாலை விபத்து பின்னர் பொது இடத்தில் கலவரமாக வெடித்ததில் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படும் நான்கு ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

சமூக வலைதத்தளங்களில் வைரலாகியுள்ள இந்தச் சம்பவம் நேற்று காலை 9 மணியளவில் நிகழ்ந்தது. அடிதடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் 20 க்கும் 57 க்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தகவல் கூறுகிறது.

நான்கு வாகனங்கள் தொடர்புடைய இந்த விபத்தில் 7 நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். இதில் யாரும் காயம் அடையவில்லை என்ற போதிலும் விபத்துக்குள்ளான கார் ஒன்றின் ஓட்டுநர் தாக்குவதற்கு ஒரு மரக்கட்டையைக் கையில் எடுத்த போது, இது கலவரமாக மாறியதாகக் கூறப்படுகிறது.

Related News