Oct 16, 2026
Thisaigal NewsYouTube

நிவாரண மையங்களில் 36 பேர் தஞ்சம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நிவாரண மையங்களில் 36 பேர் தஞ்சம்

சிகமாட், டிச. 20-


ஜொகூர் மாநிலத்தில் இன்று காலை நிலவரப்படி 11 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 36 பேர் வெள்ள நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிகாமாட், கம்போங் பத்து பாடாக் சமூக மண்டபத்தில் செயல்படும் தற்காலிக வெள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி கூறினார்.

கம்போங் செபராங் பத்து பாடாக்கில் வெள்ளம் நிலை கொண்ட காரணத்தால் அவர்கள் கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் வீடு திரும்ப இயலாத நிலையில் இருந்து வருவதாக அவர் சொன்னார்.
இதனிடையே, மெர்சிங், சுங்கை பாயா டத்தோ நிலையத்தில் நீர்மட்டம் அபாயக் கட்டத்தைக் கடந்து 2.36 மீட்டராகப் பதிவாகியுள்ளது அந்த மையம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →