கோலாலம்பூர், ஜூலை.25-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக நாளை சனிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் துருன் அன்வார் பேரணியில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு அன்வார் எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தயாராகி வருகிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
டத்தோஶ்ரீ அன்வாரைப் பதவி விலகக் கோரும் இந்தப் பேரணியைப் பாஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.
அன்வாருக்கு எதிராக நடடைபெறும் இந்தப் பேரணியில் எவ்வித பேதமின்றி மலேசியர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று, இன்று மாலை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் துன் மகாதீர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.








