Sep 23, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் ரயில்களில் பெண்களுக்கான பிரத்யேகப் பெட்டி: உலகளவில் பாராட்டு
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் ரயில்களில் பெண்களுக்கான பிரத்யேகப் பெட்டி: உலகளவில் பாராட்டு

Share:

பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற 'டெஸ் ட்ரெயின்ஸ் பாஸ் கோம் லெஸ் அத்ரெஸ்' தகவல் படத் தொடரில், கோலாலம்பூரின் பொது ரயில் சேவை இடம்பெற்றுள்ளது உலகளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, பெண்களின் பாதுகாப்பிற்காக இளஞ்சிவப்பு நிறப் பட்டைகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரத்யேகப் பெட்டிகள் பற்றிய பகுதி, இணையத்தில் வேகமாகப் பரவி பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

நெரிசல் மிக்க நேரங்களில் இந்தச் பெண்கள் பெட்டி மிகவும் பாதுகாப்பாகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் உள்ளூர் பயணிகள் சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும், இது மதத்தைக் கடந்த மரியாதை மற்றும் வசதிக்கானது என்று மெக்சிகோ, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாட்டுப் பார்வையாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பெண்களுக்குப் பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்குவதற்காக 2010-ஆம் ஆண்டில் கிரேத்தாபி தானா மலாயு ரயில்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முறை, பின்னர் பிரசாசனா நிறுவனத்தால் காஜாங் மற்றும் புத்ராஜெயா வழித்தடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News