கோலாலம்பூர், ஜனவரி.02-
பருவ மழையுடன் கூடிய பேரலைகளானது, வரும் ஜனவரி 5-ஆம் தேதி வரை தொடரும் என்பதால், சரவாக் மாநிலம் முழுவதும் நிலவி வரும் வெள்ள நிலை மேலும் தீவிரமடையலாம் என்று அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பருவ மழை பேரலை காரணமாக, சரவாக் மாநிலத்தின் தென் சீனக் கடல் கரையோரங்களில், மோசமானமான அளவில் நீர் கட்டத்தில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்காலகட்டத்தில் தாழ்வான பகுதிகள், ஆற்றங்கரைகள் மற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








