ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.01-
ஜோகூர் பாரு மாநகரின் போக்குவரத்துக் குற்றங்களுக்கான சம்மன்களுக்கு மாநகர் மன்றம் 80 விழுக்காட்டிற்கும் அதிகமாகக் கட்டணக் கழிவை வழங்குவதாக அறிவித்துள்ளது.
நாட்டின் 68 ஆவது தேசியத் தினத்தை முன்னிட்டு ஜோகூர் பாரு மாநகர் மன்றம் இந்தச் சிறப்புக் கட்டணக் கழிவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.
68 ஆவது சுதந்தித் தினத்தக் வரவேற்கும் அதே வேளையில் நிலுவையில் உள்ள தங்கள் சம்மன்களுக்கான அபாரதத் தொகையை விரைந்து செலுத்துவதற்குப் பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை இந்தக் கட்டணக் கழிவுச் சலுகை வழங்கப்படுவதாக ஜோகூர் பாரு மாநகர் மன்றம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








