கோத்தா பாரு, செப்டம்பர்.26-
ஏழு வயதுடைய தனது உறவுக்காரரின் மகனை, சுத்தியலால் தலையிலேயே அடித்துக் கடும் காயம் விளைவித்த ஆடவர் ஒருவர், பின்னர் தனது உயிரை மாய்ந்துக் கொண்ட நிலையில் அவரின் உடல், கிளந்தான், பாச்சோக், பந்தாய் மெலாவியில் கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று ஜெலாவாட்டிக் ஒரு கடை வீட்டின் முன் சிறுவனைத் தாக்கியப் பின்னர், அந்த நபர், பயத்தினால் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி, சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார் என்று பாச்சோக் மாவட்ட போலீஸ் தலைவர் டிஎஸ்பி முகமட் அஸ்ரி சுலைமான் தெரிவித்தார்.
சுத்தியலால் தாக்கப்பட்ட சிறுவன், தற்போது மருத்துவமனையில் மிக கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று டிஎஸ்பி முகமட் அஸ்ரி குறிப்பிட்டார்.








