அலோர் காஜா, ஜூலை.15-
கத்தி மற்றும் பாராங்கை ஆயுதமாகக் கொண்டு கொள்ளையிட்டு வந்த ஆடவன் என்று நம்பப்படும் கொள்ளையன் ஒருவன் பிடிபட்டான்.
கொள்ளையிடும் வீடுகளில் உள்ளவர்களைக் கத்தி, பாராங் முனையில் மிரட்டி, அவர்களை அலறவிட்டு வந்த நபருக்கு எதிராக மலாக்கா போலீசார் நடத்திய சிறப்புச் சோதனை நடவடிக்கையில் 40 வயது மதிக்கத்தக்க அந்தச் சந்தேகப் பேர்வழி பிடிபட்டான் என்று அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் அஷாரு அபு சாமா தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட கொள்ளையன் தொடர்ச்சியாக 4 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.








