Oct 16, 2026
Thisaigal NewsYouTube

அந்நிய நாட்டவர்களுக்கான மருத்துவக் கட்டணம் மறு ஆய்வு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அந்நிய நாட்டவர்களுக்கான மருத்துவக் கட்டணம் மறு ஆய்வு

டிச.11-

கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி மலேசியர்கள் அல்லாத வெளிநாட்டவர்கள், மருத்துவ சிகிச்சைக்காக செலுத்த வேண்டிய 36.24 மில்லியன் ரிங்கிட் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களுக்கான மருத்துவக் கட்டண வசூல் நடைமுறைகளை சுகாதார அமைச்சு மறு ஆய்வு செய்யவிருக்கிறது.

வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் முன்பணம் வைப்புத்தொகை மற்றும் வங்கி உத்தரவாதங்களுக்கான நடைமுறைகள் மறு ஆய்வு செய்யப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நடப்பு நடைமுறைகளை மறு ஆய்வு செய்வது மூலம் அந்நிய நாட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக செலவழிக்கப்படும் தொகையை ஈடுகட்ட இந்த தொகை போதுமான தாக இருக்க முடியும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்நிய நாட்டவர்களுக்கு நிலுவையில் இருந்த மொத்த கட்டணப்பாக்கியான 40.08 மில்லியன் ரிங்கிட், 3.84 மில்லியன் ரிங்கிட் அல்லது 9.58 விழுக்காடு குறைந்து தற்போது 36.24 மில்லியன் ரிங்கிட்டாக நிலுவையில் உள்ளது என்று என்று நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக கேள்விக்கு பதில் அளிக்கையில் சுகாதார அமைச்சு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →