Oct 6, 2026
Thisaigal NewsYouTube

எஃப்.1 போட்டியில் 40 குறுந்தொழில் முனைவோருக்கு இலவசக் கடைகள் – விற்பனை ரிங்கிட் 555,000

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எஃப்.1 போட்டியில் 40 குறுந்தொழில் முனைவோருக்கு இலவசக் கடைகள் – விற்பனை ரிங்கிட் 555,000

சிப்பாங் ஃபார்முலா 1 கார் பந்தயப் போட்டியை முன்னிட்டு 40 உள்ளூர் குறுந்தொழில் முனைவோருக்கு இலவசமாகக் கடைகள் அமைத்துக் கொடுத்து, அவர்களின் உணவு மற்றும் பான விற்பனையை ஊக்குவித்ததாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

மூன்று நாட்களுக்கு வாடகை மற்றும் விற்பனை கமிஷன் எதுவும் வசூலிக்கப்படவில்லை என்றும், தொழில் முனைவோர் சிப்பாங், நகராண்மைக்கழகத்துடன் ரிங்கிட் 180 உரிமக் கட்டணம் மட்டுமே செலுத்தியதாகவும் அவர் கூறினார்.

சிப்பாங், G Hillstand- டில் அமைக்கப்பட்ட ‘லித்தார் ராசா மடானி’யில் 40 கடைகள் மூலம் 100-க்கும் மேற்பட்ட உணவு, பான வகைகள் விற்பனை செய்யப்பட்டன. இதன் மூலம் மூன்று நாட்களில் மொத்த விற்பனை 5 லட்சத்து 55 ஆயிரம் ரிங்கிட்டை எட்டியதாக ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

அனைத்துலக அளவிலான எஃப்.1 போன்ற நிகழ்வுகளின் பொருளாதார வாய்ப்புகள் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, சிறு தொழில் முனைவோரையும் சென்றடைவதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →