Aug 12, 2026
Thisaigal NewsYouTube
ஆயிரம் ரிங்கிட் கேட்டு மிரட்டியதாக இரு போலீஸ்காரர்கள் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

ஆயிரம் ரிங்கிட் கேட்டு மிரட்டியதாக இரு போலீஸ்காரர்கள் மீது குற்றச்சாட்டு

Share:

ஜார்ஜ்டவுன், மே.27-

இவ்வாண்டு மார்ச் மாதம் பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவரின் சிறப்பு அதிகாரியிடம் ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக இரண்டு போலீஸ்காரர்கள் ஜார்ஜ்டவுன் மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

46 வயது ஷாரிஸால் அலி, 34 வயது காப்பரல் பாஃட்ஸ்லி ஜமாலுடின் என்ற இரு போலீஸ்காரர்களும் கடந்த மார்ச் 14 ஆம் தேதி அதிகாலை 2.25 மணியளவில் பினாங்கு, ஜாலான் அன்சொன் என்ற இடத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை அவ்விரு போலீஸ்காரர்களும் மறுத்து விசாரணைக் கோரியுள்ளனர்.

Related News