Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ரஷ்ய தானியங்கி தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தைப் பார்வையிட்டார் மாமன்னர்
தற்போதைய செய்திகள்

ரஷ்ய தானியங்கி தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தைப் பார்வையிட்டார் மாமன்னர்

Share:

மாஸ்கோ, ஆகஸ்ட்.07-

ரஷ்யாவிற்கு 6 நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இன்று வியாழக்கிழமை மாஸ்கோவில் உள்ள ரஷ்ய தானியங்கி தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தைப் பார்வையிட்டார்.

மாமன்னர் அந்த மையத்திற்கு வருகை புரிந்த போது அந்த மையத்தின் நிர்வாக தலைமை செயல்முறை அதிகாரி ஃபேடோர் நஸாரோவ் மகத்தான வரவேற்பை நல்கியதுடன் அந்த மையத்தின் செயல்பாடு குறித்து மாமன்னருக்கு விளக்கம் அளித்தார்.

மாமன்னருடன் மலேசிய தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ காலிட் நோர்டின், வெளியுறவு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ஶ்ரீ அம்ரான் முகமட் ஸின் மற்றும் ரஷ்யாவிற்கான மலேசியத் தூதர் டத்தோ சியோங் லூன் லாய் ஆகியோரும் அந்த மையத்திற்கு வருகை புரிந்தனர்.

Related News