Dec 3, 2025
Thisaigal NewsYouTube
1எம்.டி.பி மீதான விசாரணை நிறுத்தப்படவில்லை
தற்போதைய செய்திகள்

1எம்.டி.பி மீதான விசாரணை நிறுத்தப்படவில்லை

Share:

மிகப்பெரிய ஊழலுக்கு வித்திடப்பட்ட 1 எம்.டி.பி விவகாரம் மற்றும் அந்த ஊழலுக்கு முக்கிய காரணமானவர் என்று சந்தேகிக்கப்படும் மலேசிய தொழில் அதிபர் ஜோ லோவை தேடும் முயற்சி ஆகியவற்றை அரச மலேசிய போலீஸ் படை கைவிடவில்லை என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

ஜோ லோவுடன் வர்த்தகத் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் முன்னாள் பெண் வழக்கறிஞர் ஜாஸ்மின் லூ ஐ ஸ்வான் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டது மூலம் 1எம்.டி.பி விவகாரம் முற்றுப் பெறவில்லை. மாறாக, அதில் சம்பந்தப்பட்டுள்ள நபர்களுக்கு எதிரான போலீசாரின் தேடுதல் வேட்டை தொடர்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக ரஸாருதீன் ஹுசைன் குறிப்பிட்டார்.

Related News