பொய்யுரைத்ததாக கூறப்படும் மாணவன் ஒருவன் சுருண்டு விழும் அளவிற்கு கன்னத்தில் அறைந்ததாக கூறப்படும் கிள்ளான், கம்போங் ஜாவாவைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியை ஒருவரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி பள்ளி வளாகத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் அந்த மாணவனின் தாயார் போலீசில் புகார் செய்துள்ளதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபாங் தெரிவித்தார்.
அன்றைய தினம் மாலை 5.50 மணியளவில் பள்ளியிலிருந்து வீட்டிற்கு புறப்படுவதற்கு முன்னதாக விளையாட்டுப் பாடம் முடிந்த தமது மகன், சக மாணவர்களுடன் பள்ளி மண்டபத்தில் நின்றிருந்த வேளையில் அந்த அசிரியை இந்த தாக்கதலை மேற்கொண்டதாக சம்பந்தப்பட்ட மாது புகார் கொடுத்துள்ளார் என்று ஏசிபி சா ஹூங் ஃபாங் குறிப்பிட்டுள்ளார்.








