Oct 16, 2026
Thisaigal NewsYouTube

24 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளன

திசைகள் செய்திப்பிரிவு
Share:
24 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளன

கோலாலம்பூர், டிச. 19-


உள்ளூர் தொழில்முனைவரும், சமுதாயத்தில் சற்று பிரபலமானவருமான நபர் ஒருவர் வழிநடத்திய தென்கொரியாவிற்கான சுற்றுப்பயண ஏற்பட்டில் மோசடி நிகழ்ந்துள்ளதாக தனி நபர்களிடமிருந்து 24 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளது என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றப்பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமட் யூசோப் தெரிவித்தார்.

தென்கொரியா பயண ஏற்பாட்டில் பங்கேற்பதற்கு பணம் செலுத்திய அனைவரும் ஏமாற்றப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 4 லட்சத்து 54 ஆ யிரத்து 450 ரிங்கிட் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர் என்று டத்தோஸ்ரீ ரம்லி குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோசடி குறித்து குற்றவியல் சட்டம் 420 ஆவது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →