Oct 16, 2026
Thisaigal NewsYouTube

மலேசியப் புத்தப்பிக்கு, தாய்லாந்தில் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியப் புத்தப்பிக்கு, தாய்லாந்தில் கைது

நவ.22-

மலேசியாவைச் சேர்ந்த புத்தப்பிக்கு ஒருவர், தாய்லாந்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் வட மாநிலமான செங் மாயில் உள்ள Wat Chet Yoy என்ற பிரசித்திப்பெற்ற பெளத்த விகாரத்தில் விலை உயர்ந்தப் பொருட்களை திருடியதற்காக அந்த புத்தப் பிக்கு கையும் களவுமான பிடிபட்டுள்ளதாக தாய்லாந்து குடிநுழைவுத்துறை அதிகாரி Chinakorn Atsawaphum தெரிவித்தார்.

அந்த பெளத்த விவாகரத்தில் உள்ள விலை உயர்ந்தப்பொருட்கள் களவாடப்பட்டதாக போலீஸ் துறைக்கு கிடைத்த புகாரைத் தொடர்ந்த அந்த 50 வயது மலேசிய புத்த பிக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →