Dec 4, 2025
Thisaigal NewsYouTube
காரின் மீது மரம் விழுந்ததில் முதியவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

காரின் மீது மரம் விழுந்ததில் முதியவர் உயிரிழந்தார்

Share:

நேற்று மதியம் போகோக் சேனா அருகே கம்போங் புக்கிட் பாயூங்கில் வீசிய புயலில் நகர்ந்து கொண்டு இருந்த காரின் மீது மரம் ஒன்று விழுந்ததில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து மதியம் 3.20 மணியளவில் தங்களுக்கு அவரச அழைப்பு கிடைத்தாக போகோக் சேனா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையச் செயல்பாட்டு அதிகாரி மற்றும் மூத்த தீயணைப்பு அதிகாரி ஷஹ்ரின் முசா தெரிவித்தார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மரம் ஹூண்டாய் ரக கார் மீது விழுந்ததைக் கண்டறிந்தனர். இதனால் 74 வயது ஓட்டுநர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி சுயநினைவு இழந்த நிலையில் கிடந்தார்.

“தீயணைப்பு வீரர்கள் சிறப்பு உபகரணங்கள் மற்றும் புல்டோசரின் உதவியுடன் பாதிக்கப்பட்டவரை காரிலிருந்து வெளியே கொண்டு வந்தனர். இருப்பினும், அந்த முதியவர் இறந்து விட்டார் என்று மருத்துவ அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டதாக ஷஹ்ரின் முசாதெரிவித்தார்.

Related News