Oct 6, 2026
Thisaigal NewsYouTube

ஜோகூரில் லாரி திருட்டு, கொலை முயற்சி: இருவர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜோகூரில் லாரி திருட்டு, கொலை முயற்சி: இருவர் மீது குற்றச்சாட்டு

ஜோகூர் பாருவில் லாரி திருட்டு, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, போதைப்பொருள் வைத்திருந்தது, போலீஸ்காரரைத் தடுத்தது மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் இருவர் மீது இன்று தனித்தனி நீதிமன்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்டது.

37 வயது நிறுவன இயக்குநரான சாய் மின் குவான், பிளாஸ்டிக் தொழிற்சாலை ஊழியரான 39 வயது லோ பூன் லாய் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி மாசாய், தாமான் பெரிண்டுஸ்ரியான் பிளேந்தோங் பகுதியில் பெட்ரோல் நிலையத்தில் CD45 ரக லாரியை இருவரும் கூட்டாகத் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

லோ பூன் லாய் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, போலீஸ்காரரைத் தடுத்தது மற்றும் 0.7 கிராம் மெத்தாம்பெத்தமின் வைத்திருந்தது உள்ளிட்ட மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இதனிடையே 44 வயது பெண் ஒருவரை மிட்ஷுபிஷி டிரிதோன் வாகனத்தால் மோதிக் கொல்ல முயன்றதாக சாய் மின் குவானுக்கு எதிராக மற்றொரு குற்றஞ்சாட்டு கொண்டு வரப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பள்ளிச்சூழல் வேண்டும் – சுஹாகாம் வலியுறுத்து

ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான பள்ளிச்சூழல் வேண்டும் – சுஹாகாம் வலியுறுத்து

பட்டதாரிகளின் குறைந்த தொடக்க ஊதியத்தை 2027 வரவு செலவுத் திட்டம் தீர்க்க வேண்டும் – டத்தோ கமலநாதன்

பட்டதாரிகளின் குறைந்த தொடக்க ஊதியத்தை 2027 வரவு செலவுத் திட்டம் தீர்க்க வேண்டும் – டத்தோ கமலநாதன்

“அவர்  இனி இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை” – காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தோழி கதறல்

“அவர் இனி இல்லை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை” – காதலனால் கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் தோழி கதறல்

அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் கார் தீப்பிடிப்பு; 3 பெண்களுக்கு மூச்சுத் திணறல்

அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் கார் தீப்பிடிப்பு; 3 பெண்களுக்கு மூச்சுத் திணறல்

இசிஆர்எல் பயணக் கட்டணம் இம்மாதம் அறிவிப்பு; நவம்பரில் டிக்கெட் விற்பனை

இசிஆர்எல் பயணக் கட்டணம் இம்மாதம் அறிவிப்பு; நவம்பரில் டிக்கெட் விற்பனை

அக்டோபர் 9 முதல் பருவமழை இடைக்கால மாற்றம்; இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு

அக்டோபர் 9 முதல் பருவமழை இடைக்கால மாற்றம்; இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு