கோலாலம்பூர், ஜனவரி.17-
பிலிப்பைன்ஸின் நாகா சிட்டியிலிருந்து (Naga City) வடகிழக்கே சுமார் 104 கிலோமீட்டர் தொலைவில், இன்று மாலை 5 மணி அளவில் உருவான 'நோகேன்' வெப்ப மண்டல புயல் குறித்த ஆலோசனையை மலேசிய வானிலை ஆய்வு மையம் மெட்மலேசியா வெளியிட்டுள்ளது.
மலேசிய தேசிய வானிலை மற்றும் பூகம்ப செயல்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் புயல் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகர்வதாகவும், காற்றின் அதிகபட்ச வேகம் மணிக்கு 74 கி.மீ ஆகப் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயல் சபா, பித்தாஸ் (Pitas) நகரிலிருந்து வடகிழக்கே சுமார் 1,126 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இந்த நிலவரத்தால் மலேசியாவிற்குப் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.








