Sep 26, 2026
Thisaigal NewsYouTube
1.4 கிலோ கஞ்சா கடத்தல்: பாகிஸ்தான் தொழிலாளிக்கு 30 ஆண்டு சிறை மற்றும் பிரம்படி
தற்போதைய செய்திகள்

1.4 கிலோ கஞ்சா கடத்தல்: பாகிஸ்தான் தொழிலாளிக்கு 30 ஆண்டு சிறை மற்றும் பிரம்படி

Share:

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த புல் வெட்டும் தொழிலாளி ஒருவருக்கு ஷா ஆலம் உயர் நீதிமன்றம் இன்று 30 ஆண்டுகள் சிறை மற்றும் 12 பிரம்படி தண்டனை விதித்தது.

1.4 கிலோ கஞ்சாவை வைத்திருந்ததற்காக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீ கெம்பாங்கான் தாமான் ஈக்வைன் பகுதியில் சம்பந்தப்பட்ட தொழிலாளி இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்ற்ததில் தெரிவிக்கப்பட்டது.

அவர் கட்டாய மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார்.

Related News