Oct 9, 2026
Thisaigal NewsYouTube

எஸ்டிஆர் நிதி உதவியைப் பெறுகின்றவர்கள், தனியார் கிளினிக்குகளில் மருத்துவ சிகிச்சையைப் பெற முடியும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எஸ்டிஆர் நிதி உதவியைப் பெறுகின்றவர்கள், தனியார் கிளினிக்குகளில் மருத்துவ சிகிச்சையைப் பெற முடியும்

பெட்டாலிங் ஜெயா, ஜூன்.25-

சும்பாஙான் தூனாய் ரஹ்மா எனும் எஸ்டிஆர் நிதி உதவியைப் பெறுகின்றவர்கள், மடானி மருத்துவத் திட்டத்தின் கீழ் புரோதேக் ஹெல்த் கோர்பொரடேஷன் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தில் பதிவு செய்து கொண்டுள்ள தனியார் கிளினிக்குகளில் தற்போது சிகிச்சையைப் பெற முடியும்.

நாடு தழுவிய நிலையில் பத்து மாவட்டங்களில் உள்ள தனியார் கிளினிக்குகளில் அவர்கள் சிகிச்சையைப் பெறலாம்.

கோலாலம்பூர், கோம்பாக், உலு லங்காட், பெட்டாலிங், கிள்ளான், ஜோகூர்பாரு, கிந்தா, தீமோர் லாவுட், கோத்தா கினாபாலு மற்றும் கூச்சிங் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் கிளினிக்குகளில் அவர்கள் சிகிச்சையைப் பெற முடியும் என்று அந்த நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →