Dec 3, 2025
Thisaigal NewsYouTube
2026 பட்ஜெட்டின் கீழ் வீட்டுடைமைப் பிரச்சாரத்தை அமைச்சு தொடரும்
தற்போதைய செய்திகள்

2026 பட்ஜெட்டின் கீழ் வீட்டுடைமைப் பிரச்சாரத்தை அமைச்சு தொடரும்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.05-

2026 ஆம் ஆண்டு பட்டிஜெட்டின் கீழ் வீட்டுடைமை மீதான பிரச்சாரத்தை வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மடானி வீட்டுடைமைச் பிரச்சாரம் 3.0 என்று அழைக்கப்படும் இந்த பிரச்சார முன்னெடுப்பு, 2026 ஆண்டு பட்ஜெட்டிற்காக கருவூலத்திற்குச் சமர்ப்பித்த 13 முக்கிய பரிந்துரைகளில் ஒன்றாக இருப்பதாக ங்கா கோர் மிங் தலைமையிலான வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒவ்வொருவரும் சொந்த வீட்டுடைமை கொண்டிருப்பதை ஊக்குவிக்கும் நோக்கில் முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு வழங்கப்படும் வரி மற்றும் வரி விலக்களிப்பு சலுகைகளின் தொகுப்பை இந்த பிரச்சாரம் கொண்டு இருக்கிறது என்று அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இது சொத்துடைமை வாயிலாக நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் சொத்துடைமை ஒரு முக்கிய தூணாகப் பார்க்கப்படுகிறது என்று அது குறிப்பிட்டுள்ளது.

இந்த பிரச்சாரம் கடந்த 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. கடன் ஒப்பந்தங்களுக்கு முத்திரை வரி தள்ளுபடி செய்ய இது வகை செய்கிறது. அத்துடன் பரிமாற்ற சாதனமாக குறைந்தபட்சம் 10 விழுக்காடு தள்ளுபடி மற்றும் பல்வேறு இலவசங்களையும் வழங்குகிறது என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News