Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கணவன், மனைவி தீக்காயம் அடைவதற்கு முன் வாக்குவாதம்
தற்போதைய செய்திகள்

கணவன், மனைவி தீக்காயம் அடைவதற்கு முன் வாக்குவாதம்

Share:

ஈப்போ, பிப்ரவரி 29 -

வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் தீப்பற்றிக்கொண்டு கணவன், மனைவி கடும் தீக்காயங்களுக்கு ஆளாகுவதற்கு முன்பாக அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் 60 வயதுடைய நபரும், அவரின் 50 வயதுடைய மனைவியும் உடலில் கடும் தீக் காயங்களுக்கு ஆளாகி ராஜா பெர்மாய்சூரி பைனும் மருத்துவமனையில் சுயநினைவற்ற நிலையில் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

நேற்று காலை 10:18 மணியளவில் கார், மோட்டார் சைக்கிள் உட்பட பாதிக்கப்பட்ட இருவர் சம்பந்தப்பட்ட தீ விபத்து குறித்து தனது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாக ஈப்போ, போலீஸ் தலைவர் யாஹாய ஹஸ்ஸான் அறிவித்தார்.

தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பாக அவ்விருவரும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருக்கும் சத்தம் கேட்டதாக சாட்சியங்கள் கூறப்படுகிறது என்று யாஹாயா விளக்கினார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 307 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் சாட்சியங்களிடமிருந்து போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் யாஹாயா குறிப்பிட்டார்.

Related News

ஹெராயின் போதைப்பொருள் கடத்தல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சகோதரர்கள் உட்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு

ஹெராயின் போதைப்பொருள் கடத்தல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சகோதரர்கள் உட்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு

ஒரு லட்சம்  இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார்  அறிவிப்பு

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார் அறிவிப்பு

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு