Jun 29, 2026
Thisaigal NewsYouTube
செனாய் மருத்துவக் கருவித் தொழிற்சாலையில் சோதனை: 117 சட்டவிரோதத் தொழிலாளர்கள் கைது
தற்போதைய செய்திகள்

செனாய் மருத்துவக் கருவித் தொழிற்சாலையில் சோதனை: 117 சட்டவிரோதத் தொழிலாளர்கள் கைது

Share:

கூலாய், மார்ச்.01-

ஜொகூர், செனாய் பகுதியில் உள்ள மருத்துவக் கருவி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் குடிநுழைவுத் துறை நடத்திய சோதனையில், முறையான ஆவணங்களின்றிப் பணியாற்றிய 117 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மியன்மார், வங்காளதேசம் நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். சட்டவிரோதமாகப் பணியாளர்களை அமர்த்தியதாக அந்தத் தொழிற்சாலையின் மனிதவள அதிகாரி ஒருவரும் விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயகுநர் டத்தோ முஹமட் ருஸ்டி முஹமட் டாருஸ் தெரிவித்தார்.

அதிக ஊதியச் செலவைத் தவிர்க்கும் நோக்கில் இத்தகைய சட்டத்திற்குப் புறம்பானச் செயல்களில் ஈடுபடும் முதலாளிகளைக் கண்டறியப் பல வார காலக் கண்காணிப்பிற்குப் பிறகே இந்த ஓப்ஸ் மாஹிர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் சட்டத்தை மீறுபவர்கள் மீது எவ்வித சமரசமுமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முஹமட் ருஸ்டி எச்சரித்துள்ளார்.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு