May 21, 2026
Thisaigal NewsYouTube
மானபங்கம், 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு
தற்போதைய செய்திகள்

மானபங்கம், 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

Share:

பினாங்கு, கெப்பாலா பாத்தாஸ் – இடைப்பள்ளி ஒன்றின் தங்கும் விடுதியில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 14 பேர் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் இதுவரையில் 12 மாணவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இந்த 12 மாணவர்களை தவிர அந்த இடைநிலைப்பள்யின் ஆசிரியர்கள், தங்கும் விடுதி வார்டன் உட்பட மேலும் சிலரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியுள்ளது என்று செபெராங் பெராய் செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் முஹமாட் அஸ்ரி ஷஃபி தெரிவித்தார்.

துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்தில் விசாரணை அறிக்கை, ஒப்படைப்பதற்கு முன்னதாக விசாரணையை முழுமைப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

போலீசார் மேற்கொண்ட பூர்வாங்க விசாரணையில் ஒரு மாற்றுத் திறனாளியான ஒன்றாம் படிவ மாணவன் ஒருவர், இந்த ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது என்று முஹமாட் அஸ்ரி ஷஃபி மேலும் கூறினார்.

Related News