கூலிம் மாவட்டத்தில் இரு வெவ்வேறு இடங்களில் அரசு உதவிதிட்ட எரிபொருள்களான டீசல், ரோன் 95 பெட்ரோல் ஆகியவற்றைத் தவறாக கையாண்ட 10 உள்நாட்டு நபர்களை கைது செய்திருப்பத்தாக கெடா மாநில தலைமை காவல்துறை அதிகாரி டத்தோ பிசோல் பின் சாலே தெரிவித்தார்.
கடந்த நவம்பர் 15 ஆம் தேது கெடா மாநில குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கூலிம் மாவட்டத்தில் புக்கிட் ஆவி எனும் பகுதியில் அமைந்துள்ள ஷெல் பெட்ரோல் நிலையத்திலும் கூலிம் தொழிற்சாலை பகுதியிலும் நடத்திய சோதனை மூலம், முறைகேடாக எரிபொருள்களைப் பயன்படுத்திய 24 வயது முதல் 46 வயது வரையிலான நபர்களை காவல்துறை தடுத்து வைத்துள்ளனர் . இவர்களிடமிருந்து 18 ஆயிரம் லிட்டர் அரசு உதவிதி நிதி பெற்ற எரிபொருளான டீசலை கைப்பற்றிவுள்ளனர் .
தொடர்ந்து , அச்சோதனையில் எரிபொருளைக் கடத்த மாற்றியமைக்கப்பட்ட 2 லோரிகள், ஒன்று முதல் ஐந்து டன் கொண்ட 2 லோரிகள் , ஒரு ஃபொர்க்லிஃப்ட், 36 ஆயிரத்து 150 வெள்ளி ரொக்கத்தையும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டத்தாக டத்தோ பிசோல் பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டார் . இச்சோதனையின் மூலம் முழுமையான கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 349 ஆயிரத்து 850 வெள்ளி ஆகும் என்றார் .
மேலும் , கைது செய்யப்பட்ட நபர்களையும் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களையும் உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டத்தாக பிசோல் கூறினார் .








