Oct 18, 2026
Thisaigal NewsYouTube

நெகிரி செம்பிலான் ககுவாலாபிலாவில் ஒய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் சொந்த மகனாலேயே குத்திக் கொலை செய்ய பட்டுள்ளார்.

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நெகிரி செம்பிலான் ககுவாலாபிலாவில் ஒய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் சொந்த மகனாலேயே குத்திக் கொலை செய்ய பட்டுள்ளார்.

கோலா பிலா,அக்டோபர் 06-

கம்போங் செனலிங் அருகே உள்ள ஒரு வீட்டில் சனிக்கிழமை மாலை அச்சம்பவம் நிகழ்ந்தது .மனநலம் பாதிக்கப்பட்டவர் என நம்பப்படும் மகன் தற்கொலைக்கு முயன்ற போது 65 வயது தந்தை அவனை ஆசுவாசப்படுத்த முயன்றுள்ளார் .

அப்போது மேலும் ஆவேசமடைந்த 32 வயது மகன் தந்தையை கத்தியால் குத்திக் கொன்றான்.பின்னர் அங்கிருந்து காரில் சென்றவன் செனலிங் சிற்றூரில் சாலையோரமாக வாயில் நுரை தள்ளி இறந்துகிடந்தான்.

தந்தை மற்றும் மகனின் சடலங்கள் சவபரிசோதனைக்காக சிரம்பான் துவாங்கு ஜாபர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →