மெனு ராஹ்மா உணவு விற்பனையாளர்கள் மூலப் பொருட்களை வாங்கிக் கொள்ள சிறப்புக் கழிவு அட்டையை உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சு நாளை அறிமுகம் செய்ய உள்ளது.
இவ்விவகாரம் குறித்து தகவல் வெளியிட்ட அவ்வமைச்சின் இடைக்கால அமைச்சர் அர்மிசான் அலி தெரிவிக்கையில், அமைச்சுடன் இணைந்து இத்திட்டத்திற்கு ஆதரவு தரும் 6 பல்பொருள் பேரங்காடிகளில் வியாபாரிகள் சிறப்புக் கழிவில் உணவு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் மெனு ராஹ்மா திட்டக் கொள்கையை இது நாள் வரையில் ஆதரவளித்து வரும் வியாபாரிகளுக்காக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது என்றார்.








