கடந்த 2018 ஆம் ஆண்டு சுபாங் ஜெயா, சீபீல்டு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆயுதம் தாங்கிய நிலையில் கலவரம் விளைவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 17 பேர், எதிர்வாதம் புரிய அழைக்கப்படாமலேயே இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
சம்பந்தப்பட்டவர்கள் கூர்மையான ஆயுதங்களை தாங்கிய நிலையில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்குள் நுழைந்து கலவரம் விளைவித்தனர் என்பதற்கு ஆதாரங்களை நிரூபிப்பதில் பிராசிகியூஷன் தரப்பினர் தவறிவிட்டனர் என்று மாஜிஸ்திரேட் இஸ்கன்டார் சைனோல் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
அதேவேளையில் ஆயுதம் தாங்கிய நிலையில், இவர்கள்தான் இந்த கலவரத்தை விளைவித்தனர் என்பதை சாட்சிகள் மூலம் / துல்லியமாக அடையாளம் காட்ட பிராசிகியூஷன் தரப்பினர் தவறி விட்டதாக மாஜிஸ்திரேட் இஸ்கன்டார் தமது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
தவிர சம்பந்தப்பட்டவர்கள் பாராங், கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களை வைத்திருந்தனர் என்பதற்கு, அவற்றை ஆதாரப் பொருட்களாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பதையும் மாஜிஸ்திரேட் இஸ்கன்டார் தெரிவித்தார்.
அப்துல்லாஅதன் அடிப்படையில் சைஃபுல்லா அப்துல்லா/ ரிடுவான் செக்ஹ் ருஸ்லான்,/ இர்வான் நூர்டின், /கைரி அப்துல் ரஷிட், /ரொசைஹன் சகாரியா, /குவாயும்ஃபைசால், /அஷ்ராவ் ஃபைசால், / அப்சால் ஈஸ்ட்ரி அப்துல்லா/ , ஜாலில் தாலிப் /, கைருள் அனுவர் சபிடி / சம்ரி சயிட்/ ஷுக்ரி ரசாலி, /நோர் அஸ்மி அப்டுல் காணி, / ஷஹ்ரில் டானியல்l சஜீல்,/ ஹஸ்னசீம் ஷாஹ் சம்சுடின்,/ அக்மால் இஸ்ஸாட் அஸி/ மற்றும் இஸ்மாவி இஸ்லாஹுடின். / ஆகிய 17 பேரை விடுதலை செய்வதாக மாஜிஸ்திரேட் இஸ்கன்டார் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்
17 க்கும் 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த 17 பேரும் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 5 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 148 ஆவது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர்.








