Aug 4, 2026
Thisaigal NewsYouTube
மூன்றாவது வாகனம் சம்பந்தப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

மூன்றாவது வாகனம் சம்பந்தப்பட்டுள்ளது

Share:

சிலாங்கூர், செரென்டா அருகில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர சாலை விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில், இந்த விபத்தில் மூன்றாவது வாகனம் ஒன்று சம்பந்தப்பட்டுள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த மூன்றாவது வாகனம்தான் இந்த விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அந்த மூன்றாவது வாகனத்தின் உரிமையாளரை போலீசார் தற்போது தேடி வருவதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் ஃபைசால் தாஹ்ரிம் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 11.00 மணியளவில் ஜாலான் குவால குபு பாரு– ரவாங் – புக்கிட் பெருந்தோங் சாலையில் செரென்டா கோல்ஃப் ரிசோர்ட் அருகில் நிகழ்ந்த இந்த விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தொயோத்தா அவான்ஸா வாகனமும், பெரோடுவா அக்சியா காரும் மோதிக்கொண்ட இந்த வபத்தில் மூன்றாவது வாகனம் ஒன்று சம்பந்தப்பட்டுள்ளதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளதாக அஹ்மாட் ஃபைசால் தாஹ்ரிம் குறிப்பிட்டார்.

Related News