கோலாலம்பூர், அக்டோபர்.28-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இன்று காலையில் ஏரோடிரேன் ரயில் சேவையில் தடங்கல் ஏற்பட்டதற்கு மின் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
ஒப்பந்ததாரர்களான IJM-PESTEC கூட்டு முயற்சியில் IPJV பொறுப்பின் கீழ் உள்ள மின்சார கட்டமைப்பு முறையில், இதே போன்ற கோளாறு கடந்த அக்டோபர் 15 ஆம் ஏற்பட்டது. இதன் காரணமாக அன்று ஏரோடிரேன் ரயில் சேவை செயலிழப்புக்கு வழிவகுத்தது என்று கேஎல்ஐஏ விமான நிலையத்தை நிர்வகித்து வரும் MAHB எனப்படும் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் இன்று வெளியிட்ட ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Aerotrain ரயில் மற்றும் IPJV திட்டம் ஆகியவற்றுக்கு தலைமையேற்றுள்ள Alstom நிறுவனம், இந்த இரண்டு தடங்கள் சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கை மற்றும் விளக்கத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக MAHB மேலும் கூறியது.








